முதல்வர் கோப்பைக்கான கைப்பந்துப் போட்டி - உடுமலை அரசுக் கல்லூரி மாணவர்கள் அசத்தல்!

திருப்பூரில் முதலமைச்சர் கோப்பைக்காக நடத்தப்பட்ட கைப்பந்துப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற உடுமலை அரசு கல்லூரி மாணவர்கள் அணிக்கு ரூ.30 ஆயிரம் பரிசுத் தொகை, கோப்பை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் கோப்பைக்கான கைப்பந்துப் போட்டிகள் நடைபெற்றது.

இதில், 14 கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள்கலந்துகொண்டு விளையாடின. இறுதிப் போட்டியில், உடுமலை அரசு கலைக் கல்லூரி அணி மற்றும் KGI கலைஅறிவியல் கல்லூரி அணி மோதின.

முதல் சுற்றில், 25-18, 2வது சுற்றில் 25-23 என்ற புள்ளிகள் கணக்கில் உடுமலை அரசு கலைக் கல்லூரி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

இதைத்தொடர்ந்து, உடுமலை அரசு கலைக் கல்லூரி அணிக்கு ரூ.30 ஆயிரம் பரிசுத் தொகையும், கோப்பையும் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கல்லூரி முதல்வர் கல்யாணி, உடற்கல்வி இயக்குநர் மனோகர் செந்தூர் பாண்டியன், துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் வெற்றி பெற்ற அணியின் வீரர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...