ராணுவ வாகனத்திற்கு வழிவிடாத அரசு பேருந்து ஓட்டுநர் - துப்பாக்கி காட்டி மிரட்டிய ராணுவ அதிகாரியால் பரபரப்பு!

ஓசூர் - பெங்களூரு நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி அருகே ராணுவ தளவாடங்களை ஏற்றிச் சென்ற ராணுவ வாகனத்திற்கு வழிவிடாத அரசு பேருந்து ஓட்டுநரை, சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி ஒருவர் கன்னத்தில் அறைந்து, துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.



கோவை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ராணுவ தளவாடங்களை ஏற்றிச் சென்ற வாகனங்களுக்கு வழிவிடாத அரசு பேருந்து ஓட்டுனரை சி.ஐ.எஸ்.எஃப்அதிகாரி அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரில் இருந்து ராணுவ தளவாடங்களை ஏற்றிக்கொண்டு ராணுவ வாகனம் ஒன்று சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் துணையுடன் பெங்களூரு நோக்கி சென்றது.

இந்நிலையில், வாகனம் ஓசூர் - பெங்களூரு நெடுஞ்சாலையில் சென்ற நிலையில், குருபரப்பள்ளி அருகே முன்னால் சென்ற அரசு பேருந்து ராணுவ வாகனத்திற்கு வழிவிடவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், ராணுவ தளவாட வாகனத்திற்கு வழிவிடாததால் கண்டிக்கும் விதமாக அரசு பேருந்தை வழிமறித்த எஸ்.ஐ., பிரதாப் ஓட்டுநரை கன்னத்தில்சரமாரியாக அறைந்துள்ளார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.



இதனிடையே, அரசு பேருந்து ஓட்டுநருக்கு ஆதரவாக பொதுமக்கள், காவல்துறை வாகனத்தை முற்றுகையிட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. அப்போது, சி.ஐ.எஸ்.எஃப் வீரர்களில் ஒருவர் பொதுமக்களை நோக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டினார்.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், பின்னால் வந்தது ராணுவ வாகனம் என்பது, ஓட்டுநருக்கு தெரியாது என காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஓட்டுநரிடம் எஸ்.ஐ. பிரதாப் மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது.

துப்பாக்கியை காட்டி மிரட்டியது குறித்த கேட்டதற்கு, மிக முக்கியமான ராணுவ தளவாடம் வாகனத்தில் இருப்பதன் காரணமாக முன்னெச்சரிக்கையாக அவ்வாறு எதிர்வினை ஆற்றப்பட்டதாக சி.ஐ.எஸ்.எஃப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இருதரப்பினரும் சமாதானமாக சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...