வால்பாறை அருகே அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் மீன் வலையில் சிக்கிய முதலை - சுற்றுலா பயணிகள் அச்சம்!

வால்பாறை அருகே அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் மீனுக்காக வீசப்பட்ட வலையில், சிக்கிய முதலையை பிடிக்கும் பணியில் வனத்துறை தீவிரம். முதலையை விரைவில் பிடிக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் மீனுக்காக வீசப்பட்ட வலையில் முதலை ஒன்று சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை அருகேயுள்ள உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி என்பது அதிகளவில் மக்கள் வந்து செல்லும் பிரபலமான சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு உள்நாடு மட்டுமல்லாது வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியை காண வந்து செல்கின்றனர்.



இந்நிலையில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே மீன் பிடிப்பதற்கு வலையை விரித்துள்ளனர். இதில் முதலை ஒன்று சிக்கிக்கொண்டு நீண்ட நேரம் போராடி கொண்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்தது மட்டுமல்லாமல் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.



மீன் வலையில் சிக்கிய முதலையை வனத்துறையினர் காப்பாற்றுவதற்காக தண்ணீரில் இறங்கிய நிலையில், ஆட்களை பார்த்ததும் முதலை தண்ணீருக்குள் சென்று மறைந்தது.

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் முதலை இருப்பதை கண்ட சுற்றுலா பயணிகள் அச்சத்தில் இருந்து வரும் நிலையில், முதலையை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், அதிக மக்கள் வந்து செல்லும் சுற்றுலா தலம் என்பதால், உடனடியாக முதலையை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...