கோவையில் ரத்த தான விழிப்புணர்வு பேரணி - பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு!

கோவை சிங்காநல்லூர் அருகே தியாகி எம்.ஜி.ராமசாமி நினைவு மேல்நிலை பள்ளி மற்றும் தோழமை அறக்கட்டளை இணைந்து நடத்திய ரத்த தான விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே நடைபெற்ற ரத்த தான விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.



கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகே தோழமை அறக்கட்டளை மற்றும் தியாகி எம்.ஜி.ராமசாமி நினைவு மேல்நிலைப்பள்ளி இணைந்து ரத்த தான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.



இந்த இரத்த தான விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டு கையில் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.

அப்போது பேசிய தோழமை அறக்கட்டளை நிறுவனர் பிரியதர்ஷினி தங்கராஜ் கூறுகையில், "கடந்த 13 ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் ரத்ததான ஒருங்கிணைப்பு பணிகளை செய்து வருகிறோம். ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பள்ளி மாணவ மாணவிகள் இடையே ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது" என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...