கோவை குடிசை மாற்று வாரிய காவலருக்கு ஊதியம் தராத அதிகாரிகள் - பாதிக்கப்பட்டவர் ஆட்சியரிடம் மனு!

கோவை மாவட்டம் கீரணத்தம் குடிசை மாற்று வாரியத்தில் காவலராக பணியாற்றி வந்த காளிமுத்துவுக்கு, அங்கு பணியாற்றும் மேஸ்திரியும், AEEயும் இணைந்து ஊதியத்தை தராமல் ஏமாற்றி வருவதாக ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் கீரணத்தம் குடிசை மாற்று வாரிய காவலாளிக்கு ஊதியம் தராமல் அதிகாரிகள் ஏமாற்றுவதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கீரணத்தம் பகுதியில் உள்ள அரசு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வருபவர் காளிமுத்து. அங்கு AEE-ஆக சுதர்சனன் என்பவரும், மேஸ்திரியாக குப்புராஜ் என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், காளிமுத்து காவலாளியாக மட்டுமல்லாமல் கீரணத்தம் திட்ட பகுதியில் பராமரிப்பு பணிகளையும் தினக்கூலி அடிப்படையில் செய்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக மேஸ்திரி குப்புராஜ் பராமரிப்பு பணிக்கான ஊதியத்தையும் காவலாளியாக பணிபுரிந்த ஊதியத்தையும் கொடுக்காமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பலமுறை கேட்டும் ஊதியத்தை தராமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், இதற்கு சுதர்சனனும் உடந்தை எனவும் கூறப்படுகிறது.

இதனால், பாதிக்கப்பட்ட காளிமுத்து மன உளைச்சலுக்கு ஆளாகி தனது குடும்பத்துடன் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில் அக்கம்பக்கத்தினர், இவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அனைவரும் குணமடைந்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில், காளிமுத்து தனது குடும்பத்துடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து, தனக்கு சேர வேண்டிய ஊதியத்தை உடனடியாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...