மேட்டுப்பாளையம் பவானி ஆற்றை கண்காணிக்க 'லைப் கார்ட்ஸ் திட்டம்' துவக்கம்

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஆழம் தெரியாமல் இறங்குவதால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க காவல்துறை சார்பில் 'லைப் கார்ட்ஸ் திட்டம்' தொடங்கப்பட்டு, 24மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: பாவானி ஆற்றில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் லைஃப் கார்ட்ஸ் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வற்றாத ஜீவநீதியாக பவானி ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் கரையோரத்தில் பிரசித்தி பெற்ற வனபத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குக் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து விட்டு பவானி ஆற்றில் இறங்கி புனித நீராடுகின்றனர்.

அப்படி வரும் பக்தர்கள் பலர் ஆற்றில் சுழல் இருப்பது தெரியாமல் ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழக்கின்றனர். மேலும் மது அருந்திவிட்டு இளைஞர்கள் ஆற்றில் இறங்கிக் குளிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அப்போது, பில்லூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படுவது தெரியாமல் வெள்ளநீரில் சிக்கி, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவது வாடிக்கையாகி வருகிறது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு மட்டும் பவானி ஆற்றில் குளிக்கச் சென்ற 11 பேரில் 3 பெண்கள், 2 ஐடிஐ மாணவர்கள் உட்பட ஐந்து பேர் ஒரே நாளில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். எனவே பவானி ஆற்றில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் லைஃப் கார்ட்ஸ் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.



இந்த திட்டத்தை கோவை மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் துவக்கி வைத்தார். இந்த திட்டத்திற்காக மேட்டுப்பாளையம் காவல்நிலைய எஸ்ஐ மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்து பயிற்சி பெற்ற 10 காவலர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவானது 24 மணி நேரமும் பவானி ஆற்றங்கரையோரம் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படும். மேலும் இந்த குழுவினர் பவானி ஆறு குறித்தும், வெள்ளப்பெருக்கு குறித்தும்,வெள்ள நீரில் சிக்கி உயிரிழந்து வரும் மக்கள் குறித்தும்,பவானி ஆற்றங்கரையில் உள்ள தேக்கம்பட்டி, நெல்லித்துறை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, வச்சிம்பாளையம், லிங்காபுரம்,பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விழிப்புணர்வைப் பொதுமக்களிடையே ஏற்படுத்த உள்ளனர்.



இது குறித்து அந்த பகுதி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே கலந்தாய்வுக் கூட்டமானது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.



மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில், டிஎஸ்பி பாலாஜி மற்றும் பவானி ஆற்றங்கரையோரம் உள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டு இந்த திட்டத்தில் ஏற்படுத்த வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனைகளையும், தங்களது கருத்துக்களையும் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், லைப் கார்டு குழுவில் உள்ள 11 பேரும், 24 மணி நேரமும் லைப் ஜாக்கெட், கயிறுகள், ஹெட் லைட், டார்ச் லைட் உள்ளிட்ட பல்வேறு உயிர் காக்கும் கருவிகளுடன் தயார் நிலையில் இருப்பர்.

பவானி ஆற்றில் ஏற்படும் அசம்பாவிதங்கள் குறித்து இந்த குழுவிற்குப் பொதுமக்கள் 24 மணி நேரமும் அழைக்கலாம், அவசர உதவி எண்கள் மேட்டுப்பாளையம் டிஎஸ்பி 8667373105, மேட்டுப்பாளையம் காவல் நிலையம் 9498101186.

இந்த எண்களுக்கு பவானி ஆற்றில் ஏற்படும் அசம்பாவிதங்கள் குறித்து அவசர உதவி என்றால் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை தரப்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...