புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் கல்வி பெற 20,995 பேர் அடையாளம் - கோவை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை தகவல்

கோவையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் கல்வியறிவு பெற 20,995பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க 1,558மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பள்ளிக் கல்வித்துறை தகவல்.


கோவை : மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் கல்வியறிவு பெற 20 ஆயிரத்து 995 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப் படிக்க தெரியாதவருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வியை வழங்கிடும் நோக்கில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் - NILP (2022 - 2027) என்கின்ற வயது வந்தோருக்கான புதிய கல்வி திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. இவர்களுக்கான பயிற்சி கையேடு தொலைநோக்கு பார்வையுடன் மிகச் சிறப்பான முறையில் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, தினமும் இரண்டு மணி நேரம் வீதம் 6 மாத காலத்திற்கு பயிற்சி வழங்கப்படும். சுமார் 200 மணி நேரம் கற்பித்தல் நிகழும். பயிற்சி பெற்ற தன்னார்வலர்களைக் கொண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கிராமம், நகர் பகுதிகளில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

15 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் முதல் கட்டமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணியானது தற்போது கோவையில் மாவட்டத்தில் நடைபெற்று வந்த நிலையில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கோவையில் 20,995 பேர் எழுத படிக்கத் தெரியாதவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நபர்களுக்கு அடிப்படை கல்வியறிவு வழங்குவதற்கான நடவடிக்கையாக, பள்ளி வளாகங்கள் மற்றும் பணியிடங்களை உள்ளடக்கிய 1,558 மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சமக்ரா சிக்ஷாவின் கீழ் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் இந்த நபர்களுக்கு அந்தந்த மையங்களில் கல்வி கற்பிக்கின்றனர்.

இந்த பயிற்சில் அடிப்படைக் கல்வியாக, அடிப்படை மெய் எழுத்துக்கள், எண்கள் மற்றும் பிற முதன்மை எண்ணிக்கையில் அவர்களுக்கு பயிற்சி அளிப்பதை உள்ளடக்கியது ஆகும். மேலும் கூடுதலாக அடிப்படை உரிமைகள், இந்திய தேர்தல் பதிவு, வங்கி/ தபால் அலுவலகம்/ ரயில்வே ஆவணங்கள் மற்றும் சட்ட ஆவணங்கள் ஆகியவை எவ்வாறு பயன்படுத்துவது குறித்து கற்பிக்கப்படும்.

இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு தமிழக அரசு அறிமுகக் கல்விக்கான கிட்டுகளை வழங்கியுள்ளது. மேலும் கோவையில் அடையாளம் காணப்பட்ட 20,995 நபர்களுக்கு புதிய பாரத எழுத்தறிவு திட்டம் (NILP)பயனளிக்கிறது.

இந்தத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், எழுத்தறிவுத் திட்டத்தில் அதிகளவில் பொதுமக்கள் பங்கேற்பதை ஊக்குவிக்கவும் வகையில், ஒதுக்கப்பட்ட வகுப்பறை மையங்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்கள் முழுவதும் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...