ஆதியோகியின் அருள் பெற உதவும் ருத்ராக்‌à®· தீட்சை - இலவசமாக பெற ஆன்லைனில் பதிவு செய்யலாம்!

மஹாசிவராத்திரியன்று சத்குரு ஜக்கி வாசுதேவ் பிரதிஷ்டை செய்யும் ருத்ராக்‌ஷத்தை இலவசமாக பெறுவதற்கு பொதுமக்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஈஷா யோகா மையம் அறிவிப்பு.



கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரியன்று பிரதிஷ்டை செய்யப்படும் ருத்ராக்‌ஷத்தை இலவசமாக பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈஷா யோகா மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஆன்மீக பாதையில் இருப்பவர்கள் ருத்ராக்‌ஷம் அணிவது பன்னெடுங்கால வழக்கமாக உள்ளது. ருத்ராக்‌ஷம் என்ற வார்த்தையின் பொருளே ‘சிவனின் பரவச கண்ணீர் துளி’ என்பதாகும். அதாவது, ருத்ரா என்றால் சிவன், அக்‌ஷா என்றால் கண்ணீர் துளிகள்.

இந்நிலையில், மஹா சிவராத்திரி இரவில் லட்சக்கணக்கான ருத்ராக்‌ஷங்களை சத்குரு ஜக்கி வாசுதேவ் ஆதியோகி முன்னிலையில் பிரதிஷ்டை செய்ய உள்ளார்.

சக்தியூட்டப்பட்ட இந்த ருத்ராக்‌ஷத்தை இலவசமாக பெற விரும்பும் பக்தர்கள் https://isha.co/rd-ta என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்கள் உட்பட ஆண், பெண் வேறுபாடு இன்றி அனைவரும் இந்த ருத்ராக்‌ஷத்தை அணிந்து கொள்ளலாம்.

இந்த ருத்ராக்‌ஷத்தை அணிவது உடல் மற்றும் மனம் சமநிலை பெற உதவும். தியானம் செய்வதற்கும், அணிபவரின் ஒளி வட்டத்தை தூய்மைப்படுத்தவும் உதவிகரமாக இருக்கும். மேலும், எதிர்மறை சக்திகளுக்கு எதிரான கவசமாகவும் இருக்கும்.

ஆன்லைனில் பதிவு செய்பவர்களுக்கு, ருத்ராக்‌ஷத்துடன் சேர்த்து, தியானலிங்க விபூதி, அபய சூத்ரா, ஆதியோகி புகைப்படம் ஆகியவை அவர்களின் இல்லத்திற்கே அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...