கோவை மாநகராட்சிக்குட்பட்ட 7வது வார்டில் ஆணையாளர் நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு மண்டலத்தில் கோல்டுவின்ஸ், நேருநகர், ஆர்.ஜி.புதூரில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் பதிக்கும் பணி, குப்பை தரம் பிரிக்கும் பணி உள்ளிட்ட பணிகளை மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட 7வது வார்டு பகுதியில் நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆணையாளர் மு.பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 7ஆவது வார்டு பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப் திடீரென நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது கோல்டுவின்ஸ் சாலையில் ஐ.ஓ.சி.எல் நிறுவனத்தின் மூலம் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்.



இதேபோல் நேரு நகர் கிழக்குப் பகுதியில் தூய்மை பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பை தரம் பிரித்துச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததைப் பார்வையிட்ட அவர், இது குறித்தான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும் எனத் தூய்மை பணியாளர்களிடம் தெரிவித்தார்.

பின்னர் ஆர்.ஜி புதூர் லட்சுமி நகர் பகுதியில் நடைபெற உள்ள மழைநீர் வடிகால் அமையும், இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாமன்ற உறுப்பினர் கோவிந்தராஜ், உதவி ஆணையர் முத்துராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...