தாராபுரத்தில் தமிழ் புலிகள் கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் நடக்கும் தீண்டாமை கொடுமைகளை தடுக்க கோரியும், தமிழகத்தில் கலவரத்தை தூண்டுகின்ற வடமாநிலத்தவர்களிடமிருந்து தமிழகத்தை பாதுகாக்ககோரியும் தமிழ் புலிகள் கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தாராபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் புலிகள் கட்சிகள் சார்பில், மாவட்டச் செயலாளர் குண்டடம் காளிமுத்து தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மேற்கு மண்டல துணைச்செயலாளர் ஒண்டிவீரன். வடக்கு மாவட்டச் செயலாளர் கனக சபாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், தமிழகத்தில் நடைபெறும் தீண்டாமை கொடுமைகளைத் தடுக்க கோரியும்,வடமாநில தொழிலாளர்களால் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், தமிழகத்தில் கலவரத்தைத் தூண்டுகின்ற வடமாநிலத்தவர்களிடமிருந்து தமிழகத்தைப் பாதுகாக்கக் கோரியும், பனியன் நிறுவனங்களின் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான ஊதியத்தை அரசே நிர்ணயிக்க வலியுறுத்தப்பட்டது.



ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் வடிவேல், வழக்கறிஞர் அணி முருகையா பாண்டி, மாவட்ட பொருளாளர் ராமசாமி, தொகுதி துணைச் செயலாளர் சக்திவேல், குண்டடம் ஒன்றிய செயலாளர் மதன்குமார், குண்டடம் ஒன்றிய துணைச் செயலாளர் சரவணன், வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் அபிஷேக் மற்றும் பழனிச்சாமி, சிவக்குமார், சந்தோஷ், செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...