உடுமலை அருகே வறண்ட நிலத்தில் வசிக்க அனுமதி வழங்க கோரி திருப்பூர் ஆட்சியரிடம் மனு

உடுமலை அருகே நீர்வரத்து இன்றி, வறண்ட நிலமாக காட்சி அளிக்கும் கண்ணாநாயக்கர்குளம் பகுதியில் அருந்ததியினர் மக்கள் வசிக்க அனுமதி வழங்கக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் அருந்ததியர் இன மக்கள் 50 பேர் மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நீர்வரத்து இல்லாமல் வறண்டு காட்சியளிக்கும் நிலத்தில் வசிக்க அனுமதியளிக்க கோரி அருந்ததியின மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



உடுமலை அடுத்த லிங்கமநாய்க்கன் புதூர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த அருந்ததியர் இன மக்கள் மூன்று தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இங்குள்ள பெரும்பாலானோர் 10 வருட காலமாக வசிக்க இடமில்லாமல் கூட்டு குடும்பமாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக நீர்வரத்து இன்றி, வறண்ட நிலமாக காட்சி அளிக்கும் கண்ணாநாயக்கர்குளம் பகுதியில் அருந்ததியினர் இன மக்கள் வசிக்க அனுமதி வழங்க கோரி, வடுகபாளையம் ஊராட்சி மன்ற தலைவரிடம் பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுதொடர்பாக இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.



இந்நிலையில், நீர்வரத்து இல்லாமல் வறண்ட நிலமாக காட்சியளிக்கும் இவ்விடத்தில் அருந்ததியர் மக்கள் வசிப்பதற்கு அனுமதி வழங்க கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட அருந்ததிய மக்கள் மனு அளித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...