கோவை ரயில் நிலையத்தில் லேப்டாப் திருடிய வாலிபர் கைது

கோவை ரயில் நிலையத்தில் நின்ற நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் பயணியிடம் லேப்டாப் மற்றும் ரூ.4 ஆயிரம் பணத்தை திருடிய கேரளா இளைஞரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை ரயில் நிலையத்தில் லேப்டாப் திருடிய வாலிபரை போலீசார் விரட்டிச் சென்று பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பலசுப்பிரமணி (50). இவர் கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் படித்து வருகிறார். இந்நிலையில் பலசுப்பிரமணி சொந்த ஊர் செல்ல நேற்று தனது நண்பரான விஜய் என்பவருடன் கோவை ரயில் நிலையம் வந்தார்.

அப்போது அவரது உடைமைகளை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் இருக்கையில் வைத்து விட்டு, கிழே இறங்கிச் சென்று நண்பருடன் பேசி விட்டு உள்ளே வந்து பார்த்த போது அவரது லேப்டாப் பை மாயமானது தெரியவந்தது.

இதையடுத்து அவர் ரயில்வே போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் ரயில் நிலையத்தைக் கண்காணித்த போது 5ஆவது நடைமேடையில் லேப்டாப் பையுடன் சென்ற இளைஞரைப் பிடித்த விசாரித்த போது, லேப்டாப் திருடியது தெரியவந்தது.

மேலும் அவரிடம் போலீசார் விசாரித்ததில், கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த சியாஸ் (20) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து லேப்டாப் மற்றும் ரூ.4 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்து சியாஸை கைது செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...