பேரூர் பெரியகுளத்தில் மருத்துவ கழிவுகள் கொட்டிய விவகாரம் - மருந்தக உரிமையாளருக்கு அபராதம்

கோவை பேரூர் பெரியகுளத்தில் தடையை மீறி மருத்துவ கழிவுகளைக் கொட்டிய தனியார் மருந்தக உரிமையாளருக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார்.



கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் குளத்தில் மருத்துவ கழிவுகளைக் கொட்டியவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவையில் இயங்கி வரும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் பேரூர் பெரிய குளக்கரையில் மாயாவாக்கி (அடர்வனம்) முறையில் மரக்கன்றுகளை வைத்து பராமரித்து வருகின்றனர்.



இந்நிலையில் இன்று வழக்கம் போல மரக்கன்றுகள் பராமரிப்பு பணிக்காக அவ்வமைப்பினர் சென்ற போது, குளக்கரையில் மாத்திரைகள், மருந்து என மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தன்னார்வலர்கள் உடனடியாக அவற்றைப் புகைப்படம் எடுத்து, பேரூர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் மனு அளித்தனர். மேலும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்திலிருந்த தனியார் மருந்தக ரசீதுகளை ஒப்படைத்தனர்.



இதையடுத்து விசாரித்த செயல் அலுவலர் ஸ்ரீ அழகு பார்மா என்ற தனியார் மருந்தகத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். இந்நிலையில் பேரூர் பெரிய குளக்கரையில் மருத்துவ கழிவுகளைக் கொட்டிய மருந்தக உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும், சுகாதாரத்துறை அதிகபட்ச அபராதம் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியருக்கும் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...