சின்னமத்தம்பாளையத்தில் பைக் தடுப்புச் சுவர் மீது மோதல் - 2 பேர் பலி

மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை நோக்கி வந்து பைக் சின்னமத்தம்பாளையம் பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.


கோவை: கோவை ஜோதிபுரத்தை சேர்ந்தவர் ரோகித்(25). தச்சர் தொழிலாளியான இவரும், வீரபாண்டி சக்தி நகரை சேர்ந்த அருளானந்தம்(27) என்பவரும் நண்பர்கள் ஆவர்.

இவர்கள் இன்று அதிகாலை 2 பேரும் பைக்கில் மேட்டுப்பாளையத்திற்குச் சென்று விட்டு பின்னர் கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர். பைக்கை ரோகித் ஓட்டி வந்துள்ளார். சின்னமத்தம்பாளையம் பகுதியில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதியது.

மோதிய வேகத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டதில், தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பெரியநாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...