கோவை பி.என்.பாளையத்தில் பாஜக செயற்குழு கூட்டம் - தீர்மானங்கள் நிறைவேற்றம்!

பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்கி 3 பேர் காயமடைந்த சம்பவத்திற்குக் கண்டங்களையும், வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாஜக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



கோவை: பெரியநாயக்கன்பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.



கோவை பெரியநாயக்கன்பாளையம் நகர பாஜக செயற்குழு கூட்டம் மண்டலத் தலைவர் மகேந்திரன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பாஜக ஒன்றியக் கவுன்சிலர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் சவுந்தரராஜன், ஒன்றிய பார்வையாளர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் பிரீத்தி லட்சுமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.



செயற்குழு கூட்டத்தில், பெரியநாயக்கன் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்கி 3 பேர் காயமடைந்த சம்பவத்திற்குக் கண்டங்களையும், வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அதேபோல் பெரியநாயக்கன் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தடை விதிக்கப்பட்டுள்ள செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு மாற்று தொழில் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும், பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளில் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இன்றி நடைபெற்று வருவதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜார்கண்ட் மாநில ஆளுநராக பாஜக மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை நியமித்த மத்திய அரசிற்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் முருகானந்தம், பாஜக நிர்வாகிகள் கோபிநாத், யோகேஷ், பூபதி, வேணுகோபால் மரகதம் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...