பல்லடம் நீதிமன்றத்தில் தஞ்சமடைந்த புதுமண காதல் ஜோடிகள் - நீதிபதி வழங்கிய அதிரடித் தீர்ப்பு

காதல் திருமணம் செய்துக் கொண்ட காதல் ஜோடி தர்ஷினி - சந்துரு, தங்களுடைய பெற்றோர்கள் பிரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று இரவு தஞ்சமடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் அகிலாண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுந்தரம் என்பவரது மகன் சந்துரு. அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரது மகள் தர்ஷினி. சந்துரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், கல்லூரி படிப்பை முடித்து வீட்டில் இருக்கும் தர்ஷினி ஆகியோர் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த காதல் விவகாரம் தர்ஷினியின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தர்ஷினியை அவரது பெற்றோர் வீட்டிலேயே அடைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது. எப்படியாவது தன்னை காப்பாற்றி அழைத்துச் சொல்லுமாறு தர்ஷினி, சந்துருவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தர்ஷினி, காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.



இந்த புகார் குறித்து காவல்துறையினர் இருவரையும் தேடி வந்த நிலையில், சந்துரு மற்றும் தர்ஷினி இருவரும் பழனியில் பதிவு திருமணத்தை முடித்துக் கொண்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தால், இருவரையும் பிரித்து விடுவார்கள் என எண்ணி பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்றிரவு இரவு தஞ்சம் அடைந்தனர்.



கடத்தப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்ட தர்ஷினியை நீதிபதி விசாரணை மேற்கொண்டதில், தனது விருப்பப்படியே சந்துருவுடன் சென்றேன் எனவும் அவரை திருமணம் செய்து கொண்டேன் எனவும் வாக்குமூலம் அளித்தார். விசாரணையின் முடிவில், தர்ஷினி மற்றும் சந்துரு ஆகியோர் மேஜர் என்பதால் அவர்களின் பதிவு திருமணம் செல்லும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து, இருவரையும் பல்லடம் காவல்துறையினர் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். திடீரென புதுமண காதல் ஜோடிகள் பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தஞ்சம் அடைந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...