முதலில் எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்..!' - காவல் ஆணையரிடம் கோவை காவலர்கள் குடும்பத்தினர்!

கோவை உப்பிலிபாளையம் காவலர் குடியிருப்பில் விஷ பூச்சிகள் நடமாட்டம் காரணமாக, அங்கு மண்டி கிடக்கும் புதர்களை உடனடியாக அகற்ற வலியுறுத்தி காவலர்கள் குடும்பத்தினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் மண்டியுள்ள புதர்களை அகற்றகோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

உப்பிலிபாளையம் பகுதியில் காவலர் குடியிருப்பு வளாகத்தில் சுமார் 400 வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் நீண்ட நாட்களாக தூய்மை பணிகளை மேற்கொள்ளாததால் புதர் மண்டி கிடப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் நடமாட்டம் இருப்பதால், குழந்தைகளுடன் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக கூறும் காவலர்களின் குடும்பத்தினர் விஷபூச்சிகளின் காரணமாக பெரும்பாலான காவலர்கள் குடியிருப்பை காலி செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

உதவி ஆணையர், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவலர்களின் குடும்பத்தினர் என சுமார் 40 குடும்பங்கள் வசித்து வரும் குடியிருப்பு வளாகத்தில் உள்ள புதர்களை அகற்ற வலியுறுத்தி காவலர்களின் குடும்பத்தினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

மேலும் விரைவாக குடியிருப்பு வளாகத்தில் உள்ள புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...