வால்பாறை ஏ.டி.எம் மையங்களை ஆக்கிரமிக்கும் கந்துவட்டி கும்பல் - பொதுமக்கள் புகார்

கோவை மாவட்டம் வால்பாறையில் கந்துவட்டிக் கும்பல் அதிக அளவில் ஏ.டி.எம் மையங்களை பயன்படுத்துவதால், பணப் பற்றாக்குறை ஏற்பட்டு, பொதுமக்கள் அவசரத்திற்கு பணம் எடுக்க முடியாத நிலை ஏற்படுவதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் 62 எஸ்டேட்டுகள் உள்ளன. சுமார் 75 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு உள்ள மக்கள், தேயிலை தோட்டத்தில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து வருகின்றனர். மாதம் 5 ம் தேதி முதல் 10 தேதி வரை தொழிலாளர்கள் வங்கி கணக்கில் சம்பளம் போடப்படுகிறது. வால்பாறையில் மூன்று வங்கி ஏ.டி.எம் மையங்கள் உள்ளன.

தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கிய பின்பு ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்க அதிக கூட்டம் கூடுவதால், மக்கள் அதிக சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதைத் தவிர சம்பள நாட்களில் வால்பாறை ஏடிஎம் மையத்தில் இரவில் ஒன்றுக்கு மேற்பட்ட கந்து வட்டி கடையினர் ஒரே நபர் 50க்கும் மேற்பட்ட ஏடிஎம் பயன்படுத்தி பணத்தை எடுப்பது வழக்கமாக நடைபெற்றுவருகிறது.



இதனால், காலையில் பொதுமக்கள், அவர்கள் தேவைக்கு பணம் எடுக்க சென்றால் ஏடிஎம் மையத்தில் பணம் இல்லாமல் போகிறது. இதனால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மக்கள் கந்து வட்டி கடைகாரர்களிடம் பணம் பெற்றால், பணம் பெறுவோரின் ஏடிஎம் கார்டை ஒப்படைத்து பணம் வாங்க வேண்டும்.

கந்து வட்டி கடைகாரர்கள் கடனை வசூலிக்கும்வரை மாதம் தோறும் சம்பளம் வங்கிக் கணக்கில் வந்தவுடன், கந்து வட்டி கடைகாரர்கள் ஏடிஎம் மையத்தில் கடன் வழங்கிய பணத்தை எடுத்து கொள்கின்றனர். கடன் வாங்கியவர் அவசர தேவைக்கும், மருத்துவ தேவைக்கும் பணம் இல்லாமல் மேலும் மேலும் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகிவருகின்றனர்.



இதற்குத் தீர்வு காணும் வகையில், வால்பாறை பகுதியில் உள்ள ஏடிஎம்களில் அதிக பணம் வைக்கவும், ஏடிஎம் மையத்தில் இரவு நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையிலான ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தினால் அவற்றை காவல்துறையினர் கண்காணித்து விசாரணை நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தன்னார்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...