கோவை குண்டுவெடிப்பு தினம் - ஆர்.எஸ்.புரத்தில் நினைவு தூண் அமைக்க கோரிக்கை!

கோவை குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றதன் 25வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ஆர்.எஸ்.புரத்தில் நினைவுத்தூண் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில பாரத மக்கள் கட்சி தலைவர் ராமநாதன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


கோவை: கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி14 ஆம் தேதி கோவை நகரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 58 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.



பலர் படுகாயமடைந்தனர். குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில், மோட்சதீபம் ஏற்றி புஷ்பாஞ்சலியை பல்வேறு இந்து அமைப்பினர் நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில், அகில பாரத மக்கள் கட்சி சார்பாக அதன் நிறுவன தலைவர் எஸ்.ராமநாதன் தலைமையில் கோவை பர்லி மைதானத்தில் இருந்து ஊர்வலமாக கையில் தீபத்தை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று நினைவு அஞ்சலி செலுத்தினர்.



முன்னதாக செய்தியாளர்களிடம் அகில பாரத மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமநாதன் மற்றும் மாநில தலைவர் பாபு பரமேஸ்வரன் ஆகியோர் பேசினர்.



அப்போது, குண்டுவெடிப்பில் இறந்த பொது மக்களின் நினைவாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் நினைவுத்தூண் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றனர்.



இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட தலைவர் இளந்தென்றல் சிவா, துணை தலைவர் சேகர், செய்தி தொடர்பாளர் நாகராஜ் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மோகன் வினோத் மணிகண்டன் மகளிர் அணி தலைவி ஷர்மிளா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...