திருடப்பட்ட ரூ.12.50 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு - உரிமையாளர்களிடம் ஒப்படைத்த நீலகிரி எஸ்.பி.!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் திருடப்பட்ட 12.50 லட்சம் மதிப்பிலான 152 செல்போன்கள் மீட்கப்பட்டு, உரிமையாளர்களிடம் இன்று வழங்கப்பட்டன. ஆன்லைன் மோசடி மூலம் ஏமாற்றபட்ட 3 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு பாதிக்கபட்டவரிடம் எஸ்பி பிரபாகர் வழங்கினார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் ஆன்லைன் மோசடி மற்றும் சமூக வலை தள குற்றங்கள் தொடர்பாக 679 புகார்கள் வந்தன. அவற்றில் 67 புகார்களில் வழக்குகள் பதிவு செய்தூள்ள மாவட்ட சைபர் காவல் துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.



அதில், 181 செல்போன்கள் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து கொள்ளை அடித்து செல்லப்பட்டது. அவற்றில் 152 செல்போன்களை மீட்டுள்ள நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பளர் முன்னிலையில் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கபட்டது.



அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகர், நீலகிரி மாவட்டத்தில் சைபர் குற்றங்கள் மூலமாக இதுவரை 6 கோடியே 16 லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது. அதில், 10 லட்சம் மீட்கபட்டு பாதிக்கபட்டவர்களிடம் ஒப்படைக்கபட்டுள்ளது. 4 கோடியே 40 லட்சம் ரூபாயை வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.



மேலும், தற்போது 12.50 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன.



52 செல்போன்கள் மீட்கும் பணி தொடர்கிறது, ஆன்லைன் மோசடி மூலம் ஏமாற்றபட்ட 3 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு பாதிக்கபட்டவரிடம் ஒப்படைக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...