உடுமலையில் புதிதாகக் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் - காட்சிப்பொருளாக நிற்கும் அவலம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை ராமசாமி நகரில் கட்டப்பட்ட நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா முடிந்தும், இதுவரை மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் நியமனம் செய்யப்படாததால், பயன்பாடின்றி வெறும் காட்சிப்பொருளாக இருந்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


திருப்பூர்: உடுமலை நகராட்சியில் 33வது வார்டுகளில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மக்களின் அடிப்படை மருத்துவம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய திட்டங்களுக்காக நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையம் வக்கீல் நாகராஜன் வீதியில் செயல்படுகிறது. தினமும் நூற்றுக்கணக்கான கர்ப்பிணிகள், தாய்மார்கள் வருவதால் இட நெருக்கடி ஏற்படுகிறது.

நகரின் தெற்குப்பகுதியில் 16 வார்டுகளில் வசிக்கும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வர வேண்டியுள்ளது. இதற்கு தீர்வு காண தெற்கு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து, ராமசாமி நகரில் 25 லட்ச ரூபாய் செலவில் புதிய நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. பணியில் முடிந்து கடந்த இரண்டு மாதத்திற்கு முன் கட்டிடத்திற்கு திறப்பு விழா நடத்தப்பட்டது.



ஆனால், இதுவரை நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் மக்கள் பயன்பாட்டிற்கு உதவாமல், இந்த ஆரம்ப சுகாதார நிலையம் வெறும் காட்சிப் பொருளாக இருந்துவருகிறது.

இது குறித்து சுகாதார துறையினரிடம் கேட்டபோது, நகரப்புற ஆரம்பசுகாதார நிலையங்களுக்கென அரசு உத்தரவு அடிப்படையில், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். பணி நியமனத்துக்கான உத்தரவு எதுவும் இதுவரை அரசால் வழங்கப்படவில்லை, என்றனர்.

பொதுமக்கள் நலனுக்காக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்குத் தேவையான மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களை உடனடியாக நியமனம் செய்து, காட்சிப்பொருளாக நிற்கும் கட்டத்தை விரைந்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டுமென அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...