தாராபுரம் அமராவதி ஆற்றில் ராட்சத முதலை நடமாட்டம் - அச்சத்தில் பொதுமக்கள்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி ஈஸ்வரன் கோயில் ஆற்று பாலத்தின் கீழ் 11 அடி நீள ராட்சத முதலையை பார்த்து பெண்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். ஆற்றில் உலாவரும் முதலையைக் காண ஏராளமானோர் அமராவதி ஆற்றுப் பாலத்தின் மேல் கூடினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஈஸ்வரன் கோவில் அமராவதி ஆற்றில் இரண்டு முதலைகள் இருப்பதால் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.



இந்த நிலையில், தாராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் கடந்த சில தினங்களாக முதலைகள் நடமாட்டம் இருந்து வந்தது.

அதன்படி, தாளக்கரை அலங்கியம் ஆற்றுப்பாலம், சீதக்காடு, மணலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலை தென்பட்ட நிலையில், தற்பொழுது தாராபுரம் புதிய பாலம் ஈஸ்வரன் கோயில் அமராவதி ஆற்றுப் பாலத்தின்மேல் பதினோரு அடி நீளம் கொண்ட பிரம்மாண்ட ராட்சச முதலை ஒன்று காலையில் உலா வந்து கொண்டிருந்தது.



இதை, அங்கு துணி துவைத்துக் கொண்டிருந்த பெண்கள் பார்த்து அலறியடித்து ஓடினர். அமராவதி ஆற்றில் முதலை உலா வரும் தகவல் பொதுமக்கள் மத்தியில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஆற்றில் உலாவரும் முதலையைக் காண ஏராளமானோர் அமராவதி ஆற்றுப் பாலத்தின் மேல் கூடினர்.

முதலை நடமாட்டம் தொடர்பாக காங்கேயம் வனச்சரகர் தனபாலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.



அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பத்துக்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள், அமராவதி ஆற்றில் நடமாடிவரும் முதலைக்கு வலைவீசிப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...