கோவை அருகே பெண்ணை கத்தியால் தாக்கி நகை பறிக்க முயற்சி - தப்பியோடிய நபருக்கு போலீஸ் வலை!

கோவைப்புதூர் அருகே கொரியர் கொடுப்பது போல் வந்த நபர், திடீரென பெண்ணை கத்தியால் தாக்கி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்துச் சென்றார். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை அடுத்த கோவைப்புதூர் தில்லை நகரை சேர்ந்தவர் மோதிலால் ஐடி நிறுவன ஊழியர்.



இவரது மனைவி சங்கீதா (வயது40), இவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று பிற்பகல் வீட்டில் இருந்தபோது கொரியர் வந்ததாக சங்கீதாவை இளைஞர் ஒருவர் வெளியே அழைத்துள்ளார். அப்போது கொரியரை கொடுத்த அந்த நபர், சங்கீதா கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றார்.



அப்போது, சங்கீதா சத்தம் போட்டதால், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் வெட்டியுள்ளார். அதற்குள் அக்கம் பக்கத்தினர் வந்ததால், அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதையடுத்து, சங்கீதாவை மீட்ட அக்கம்பக்கத்தினர் குனியமுத்தூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த குனியமுத்தூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல் கட்டமாக, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, குனியமுத்தூர், சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர். பட்டப்பகலில் பெண்ணின் கழுத்தை அறுத்து செயினை திருட முயன்ற நபரால் அப்பகுதியில் பரபரப்பு நிலவிவருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...