கோவை க.க.சாவடி கோயில் உண்டியலை உடைத்து பணம், நகை திருட்டு - சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

கோவை க.க. சாவடி பகுதியில் நெடுஞ்சாலையோரத்தில் உள்ள மாகாளியம்மன் கோயில் ஒன்றில் நள்ளிரவு நேரத்தில் நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த உண்டியலை உடைத்து பணம், நகை கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: à®•ோவை பாலக்காடு சாலை க.க.சாவடி பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு மாகாளியம்மன் திருக்கோவில்.



இந்த கோவிலில் தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு கோவிலில் பூசாரி நடையை அடைத்து விட்டு சென்றுள்ளார்.

இன்று அதிகாலை கோவிலை திறந்து பூஜை செய்ய வந்தபோது கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டது கண்டு பூசாரி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காவல்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் பொதுமக்கள் அங்கு திரண்டனர். அப்போது, அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.



அதில், நள்ளிரவு சுமார் ஒன்றரை மணி அளவில் மர்ம நபர்கள் மூன்று பேர் கோவிலுக்குள் நுழைந்து, அங்கிருந்த உண்டியலை கடப்பாரை வைத்து உடைத்து நகை, பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்த காட்சிகள் பதிவாகி இருந்தது.



மேலும் கொள்ளையடித்த பணம் நகை ஆகியவற்றை கோவிலில் இருந்த துணி ஒன்றை எடுத்து அதில் மூட்டையாக கட்டி இரு சக்கர வாகனம் மூலம் அவர்கள் தப்பிச் செல்வதும் பதிவாகியிருந்தது.

இதைத்தொடர்ந்து, கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள க.க.சாவடி காவல் நிலைய போலீசார், சிசிடிவி காட்சிகளின் உதவியோடு, கொள்ளையர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...