மேட்டுப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி பத்திரப்பதிவு? - அடுத்தடுத்த போராட்டத்தால் பரபரப்பு

சிக்காரம்பாளையம் கிராமத்தில் பட்டா, சிட்டா போன்ற ஆவணங்களைத் தன்வசம் வைத்துள்ள நபர்களின் இடத்தை அவர்களுக்கே தெரியாமல், வேறுநபரின் பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டி மேட்டுப்பாளையம் சார் பதிவாளர்கள் அலுவலகத்தில் நில உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: மேட்டுப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணங்களை கொண்டு பத்திரப்பதிவு நடைபெற்று வருவதாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது நில உரிமையாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகாவில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் பல்வேறு நிலசம்பந்தமான பத்திரப்பதிவுகள், நில ஆவணங்கள் அடிப்படையில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் கடந்த இரு தினங்களில் 20-க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து போலி ஆவணங்களைக் கொண்டு பத்திரப்பதிவு நடத்தப்பட்டுள்ளதாகக் கூறி அந்த அலுவலகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தும் அளவுக்கு சென்றுள்ளது, பொதுமக்கள் மற்றும் நிலம் வைத்துள்ளவர்கள் மத்திய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம் தங்களது விவசாய நிலத்தை எங்களுக்கே தெரியாமல் அந்த ஊரிலேயே இல்லாத நபர் ஒருவர் தன்னுடைய நிலம் என மேட்டுப்பாளையம் பத்திரப்பதிவு அலுவலகத்தின் மூலம் விற்பனை செய்ததாகக் கூறி 10பேர் சார்பதிவாளர் முன்பு அலுவலகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.



இதனையடுத்து அந்த பத்திரப்பதிவு போலியானதா என உயர் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்ட நிலையில், இன்று சிக்காரம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் அதே மாதிரியான ஒரு புகார் தெரிவித்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.

சிக்காரம்பாளையம் கிராமத்தில் பட்டா, சிட்டா போன்ற ஆவணங்களைத் தன்வசம் வைத்துள்ள நபர்களின் இடத்தை அவர்களுக்கே தெரியாமல் அருகில் இடம் வாங்கிய நபர் தங்களது நிலத்தையும் சேர்த்து அவருடைய நிலம் எனப் பத்திரப்பதிவு செய்துள்ளார்.



அதிகாரிகள் எந்த ஆய்வு பணியும் மேற்கொள்ளாமல் இவ்வாறு பத்திரப்பதிவு செய்து கொடுத்தால் நாங்கள் எங்குச் சென்று முறையிடுவது எனக் கூறி அதிகாரிகளை கண்டித்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.



இதனையடுத்து தகவல் அறிந்து வந்த மேட்டுப்பாளையம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசி, இடம் சம்பந்தமாகப் பிரச்சனை என்றால் மாவட்ட பதிவாளர் அலுவலகம் சென்று முறையிடலாம், நீதிமன்றம் செல்லாம் மற்ற பணிகள் பாதிக்கப்படுவதாகக் கூறி அனுப்பிவைத்தனர்.



இருப்பினும் அடுத்தடுத்து மேட்டுப்பாளையம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடைபெறும் பத்திரப்பதிவுகள் மீது போலி ஆவணங்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் இந்த அலுவலகத்தை ஆய்வு செய்வதுடன் போலி ஆவணங்கள் உறுதி செய்யப்பட்டால் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அதே சமயத்தில் எங்கு தங்களது நிலமும் இதுமாதிரி விற்கப்பட்டுள்ளதா என நிலம் வைத்துள்ளவர்கள் மத்தியில் அச்சமும் ஏற்பட்டு வருவது நில உரிமையாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...