திருப்பூர் மாவட்ட பாஜக ஊடக பிரிவு தலைவர் மறைவு - நேரில் வந்து அஞ்சலி செலுத்திய அண்ணாமலை!

திருப்பூர் மாவட்ட பாஜக ஊடகப்பிரிவு தலைவராக இருந்த நரேன் பாபு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை அவரது வீட்டிற்கு நேரடியாக சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.


திருப்பூர்: சமீபத்தில் மறைந்த திருப்பூர் மாவட்ட பாஜக ஊடகப் பிரிவு தலைவரின் வீட்டுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை நேரடியாக சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் பாஜக கட்சியின் ஊடக பிரிவு தலைவராக செயல்பட்டு வந்த நரேன் பாபு, கடந்த சில நாட்களுக்கு முன்பாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் கே.செட்டிபாளையம் பகுதியில் உள்ள நரேன் பாபுவின் வீட்டிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.



மேலும், அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஊடக பிரிவு தலைவர் நரேன் பாபு புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.



இதனையடுத்து, கோவையில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்விற்கு கலந்து கொள்ள சென்றார். இதில், கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்வேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...