கோவை மாவட்டத்தில் ரூ.52 கோடி மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி

கோவை மாவட்டத்தில் 2,183 சுய உதவிக்குழுக்களில் உள்ள 22,699 உறுப்பினர்கள் பெற்ற ரூ.52.08 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் டியூகாஸ் வங்கி நிறுவனத்தில் வழங்கப்பட்டது.


கோவை: கோவை மகளிர் உதவிக் குழுக்களுக்குக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

கோவையில் 137 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 10 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், 4 கூட்டுறவு நகர வங்கிகள், டியூகாஸ் என்கிற துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம் மற்றும் கோயமுத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் 29 கிளைகள் மூலம் சுய உதவிக் குழு கடன் வழங்கி வருகின்றது.



இந்த நிலையில் தமிழக அரசின் ஆணையின்படி 31.03.2021 அன்று வரை நிலுவையிலுள்ள சுய உதவிக்குழுக் கடன்களை அரசு தள்ளுபடி செய்துள்ளதால், கோவை மாவட்டத்தில் 2183 சுய உதவிக்குழுக்களில் உள்ள 22,699 உறுப்பினர்களுக்கு பெற்ற ரூ.52.08 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் டியூகாஸ் வங்கி நிறுவனத்தில் வழங்கப்பட்டது.



இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாட்டி அனைவருக்கும் வழங்கினார்.



தொடர்ந்து வேப்ப புண்ணாக்கு, உரம் தயாரித்தல், நெல் விதை தரம் பிரித்தல் உள்ளிட்டவைகளை பார்வையிட்டார்.



இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், கோயமுத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் இந்துமதி, டியூகாஸ் மேலாண்மை இயக்குநர் சிவகுமார் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...