தன்னை பார்த்து குறைத்த நாயை அரிவாளால் வெட்டிய நபர் ஜாமீனில் விடுவிப்பு

கோவை நல்லாம்பாளையம் பகுதியில் தெருவில் நடந்து சென்றபோது நாய் குறைத்ததால், செந்தில்குமார் என்பவர் விரட்டி, விரட்டி அரிவாளால் வெட்டியுள்ளார்.


கோவை: தன்னை பார்த்துக் குறைத்த நாயை வெட்டியவரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுதலை செய்தனர்.

கோவை சாய்பாபா கோவில் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் நல்லாம்பாளையம் புதுத்தோட்டம், மூன்றாவது தெரு வழியாகச் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கிருந்த நாய் ஒன்று இவரைப் பார்த்துக் குறைத்துள்ளது.

இதில் எரிச்சல் அடைந்த செந்தில்குமார் தான் வைத்திருந்த அரிவாளால் அந்த நாயை, வெட்டி காயப்படுத்தியுள்ளார். இதில் நாயின் கால், தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதைப் பார்த்த அங்கிருந்த கணுவாய் பகுதியைச் சேர்ந்த பிரியா என்பவர், துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பிரியாவின் புகாரைத் தொடர்ந்து செந்தில்குமார் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர். அவரை கைது செய்து காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...