கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு - கோவை உள்ளிட்ட 60 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை

கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக, கோவையில் உக்கடம், குனியமுத்தூர், ஆத்துப்பாலம், கரும்புக்கடை, ஜி எம் நகர், வசந்தம் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 15-க்கும் மேற்பட்ட வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள், இன்று காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.



கோவை: கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் ஒன்று வெடித்து விபத்துக்குள்ளானது. இது வெறும் விபத்தல்ல இது சதித்திட்டத்தின் பின்னணி என்று போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

கார் வெடிப்புக்கு உள்ளானதில் ஜமீசா முபின் என்ற இளைஞர் பலியானார். ஜமீசா முபினின் பின்னணி மற்றும் அவர்களின் சகாக்கள் உள்ளிட்டவர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்பொழுது முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த நான்கு நாட்களில் இந்த வழக்கு சென்னை என்.ஐ.ஏ. அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கை கையில் எடுத்த என் ஐ ஏ அதிகாரிகள் தமிழ்நாடு போலீசாரிடமிருந்து பெறப்பட்ட கோப்புகளின் அடிப்படையில் விசாரணையை துரிதப்படுத்தினர்.

அதன்பேரில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் கோவை வந்த என். ஐ. ஏ அதிகாரிகள் ஜமீஷா முபினின் மனைவி மற்றும் முன்னாள் கைதான நபர்களிடம் வாக்குமூலம் பெற்று ஆவணப்படுத்தி இருக்கின்றனர்.



அதன் அடிப்படையில், இன்று காலை சென்னை, நெல்லை கோவை உள்ளிட்ட 60 இடங்களில் தேசிய முகமை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.



கோயம்புத்தூரை பொறுத்தவரையில் உக்கடம், குனியமுத்தூர், ஆத்துப்பாலம், கரும்புக்கடை, ஜி எம் நகர், வசந்தம் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பதினைந்திற்கும் மேற்பட்ட வீடுகளில் என் ஐ ஏ அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர்.



முன்னதாக கிடைக்கப் பெற்ற தடயங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் நடந்து வரும் இந்த சோதனையில், அடுத்த கட்டமாக யார் கைதாக போகின்றனர் ? என்ன கைப்பற்றபோகின்றது ? என்ற விவரங்கள் பின்னர்தான் தெரியவரும். சிறு கால இடைவெளியில் மீண்டும் தேசிய முகமை அதிகாரிகள் மேற்கொண்டுவரும் இந்த திடீர் சோதனை கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...