பொள்ளாச்சியில் என்.ஐ.ஏ சோதனை - இஸ்லாம் அமைப்பின் தலைவரிடம் தீவிர விசாரணை

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தடை செய்யப்பட்ட இந்திய மாணவர்களின் இஸ்லாமிய இயக்க அமைப்பின் மாநில தலைவர் சையது ரகுமான் வீட்டில் என்.ஏ.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர்.



கோவை: தமிழகத்தில் சென்னை, கோவை, திருநெல்வேலி, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் 40 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அமைப்பினர் சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த கார் வெடிப்பு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.



அந்த வகையில், பொள்ளாச்சியில் உள்ள ஜோதி நகர் டி-காலனி, பி.ஆர்.கந்தசாமி வீதியில் உள்ள இந்திய மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம் அமைப்பின் மாநில தலைவர் உமரி (எ) சையது ரகுமான் (வயது 51) என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை துறை துணை கண்காணிப்பாளர் பாண்டே தலைமையிலான 4 அதிகாரிகள் கொண்ட குழு சோதனை நடத்திவருகிறது.



மேலும், சையது ரகுமான், அவரது மனைவி பர்வீனா சுல்தான் உள்ளிட்ட குடும்பத்தாரிடமும் இந்தக் குழு தீவிர விசாரணை மேற்கொண்டுவருவதோடு, வீட்டில் உள்ள ஆவணங்களையும் ஆய்வு செய்துவருகிறது. இதனால், பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...