சிறைவாசிகளுக்கு 'டிஜிட்டல்' நூலகத் திட்டம் - கோவை மத்திய சிறையில் தொடக்கம்

கோவை மத்திய சிறைச்சாலையில் காலை, மாலை ஒரு மணிநேரம் ழுத்தாளர்களின் நூல்கள், நீதிக்கதைகள், மன ஆற்றுபடுத்துதல் தொடர்பான நூல்கள், நல்லொழுக்க கதைகள் போன்றவை ஒலி, ஒளி வடிவில் வாசிக்கப்படுகிறது.


கோவை: கோவை மத்திய சிறையில் சுமார் 2400 சிறைவாசிகள் உள்ளனர். சிறைவாசிகளை நல்வழிப்படுத்த புத்தக வாசிப்பு பழக்கம் ஊக்குவிக்கப்பட்டுவருகிறது. இதற்காக கோவை மத்திய சிறை நிர்வாகத்தால் சுமார் 10 ஆயிரம் புத்தகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.



அதன் அடுத்த கட்டமாக, கோவை சிறையில் டிஜிட்டல் நூலக திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறைவாசிகளுக்கான இந்தப் புதிய திட்டத்தை கோவை சரக சிறைத்துறை துணைத்தலைவர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.

இதன்படி, சிறையில் உள்ள 85 தொலைக்காட்சிகளின் வாயிலாக தினமும் காலை மற்றும் மாலையில் 1 மணி நேரம் விருது பெற்ற பிரபலமான எழுத்தாளர்களின் நூல்கள், நீதிக்கதைகள், மன ஆற்றுபடுத்துதல் தொடர்பான நூல்கள், நல்லொழுக்க கதைகள் போன்றவை ஒலி, ஒளி வடிவில் வாசிக்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...