கும்கி யானை கலீம்..! - பெயரைக் கேட்டாலே கதிகலங்கும் யானைக் கூட்டம்...!!

வனப்பகுதியிலிருந்து குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்கு புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டுயானைகளை அடக்கும் அங்குசமாக பயன்படுத்தப்படும் கும்கி யானைதான் கலீம். இந்தப் பெயரைக் கேட்டாலே காட்டுயானைகள் கதிகலங்கும் அளவுக்கு கலீம் யானை பிரபலம். இது பற்றிய சிறப்பு தொகுப்பு இதோ..



கோவை: ”யார் அடிச்சா பொறிகலங்கி பூமி அதிர்றது உடம்புல தெரியுதோ ... அவன் தான் தமிழ்” - என்ற தளபதி விஜய் படத்தின் வசனம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, இந்த கும்கி யானையான கலீமுக்கு பொருந்தும். தோற்றத்திலே கம்பீரம், தோரணையில் மிடுக்கு, பாசத்தில் பச்சிளம் குழந்தை என பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும் காடுகளின் தளபதி என்று போற்றப்படும் பெருமைக்குரியது இந்த கலீம். மாஸ் என்ற சொல்லின் மறுபெயரே கலீம் என்று சொன்னால் அது மிகையல்ல.

வனத்திலிருந்து வெளியேறி ஊருக்குள் உலா வந்து அட்டகாசம், அமர்க்களம் செய்யும் காட்டு யானைகள், கலீம் என்ற பெயரை கேட்டால் குலை நடுங்கும். இல்லை என்றால் கலிம் தன் செயல்பாடுகளால் காட்டுயானைக் கூட்டத்தை அடக்கி விரட்டும். இதுவே வரலாறு..



யார் இந்த கலீம் ?... கெட்ட பையன் சார் இந்த கலீம்

1972 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் வனத்தில் தாதாவாக வலம் வந்த இந்த கலீம், 7வயது குட்டி யானையாக இருக்கும்போதே, வனத்துக்குள் வருவோரை ரணம் செய்த பெருமைக்குரியது. அந்த காலகட்டத்தில் சத்தியமங்கலம் வனத்துக்குள் வாகனங்களுக்கு தார் சாலைகள் அமைக்கப்பட்டன. யானைகள் வலசை செல்கின்ற பகுதிகளில் இந்த தார் சாலை அமைக்கப்பட்டிருந்தன.

இந்த வன வழியில் பயணிக்கும் பலருக்கும், தலைவலியை தந்ததுதான் இந்த கலீம். தங்களது இருப்பிடத்துக்குள் ஏன் வந்தீர்கள் என்ற தோரணையில் வன சாலையில் பயணிக்கும் வாகனங்கள் கலீமால் பதம் பார்க்கப்பட்டிருக்கின்றன. அன்றைய காலகட்டத்தில் வன வழியில் பயணிக்கும்போது, கலீம் கண்களில் பட்டுவிடக்கூடாது கடவுளே என்ற வேண்டுதல் இல்லாத வாகன ஓட்டிகளே இல்லை என்றுசொல்லும்அளவுக்கு சிறு வயதிலேயே சீற்றத்துடன் காணப்பட்ட யானைதான் இந்த கலீம்.



குலை நடுங்க வைத்த கலீம்... குழந்தையான காலம்

வாகன ஓட்டிகளை ஓடவிட்ட கலீம், ஒரு கட்டத்தில் வனத்துறையின் வலையில் மாட்டிக் கொண்டது. வனத்துறையின் கடும் போராட்டத்துக்குபின் பிடிபட்டு, இளம் யானையாக 7 வயதில் வனத்துறை வசம் வந்த கலீம், இன்று அரை நூற்றாண்டைக் கடந்து கும்கி யானையாக வீறு நடை போடுகிறது. சத்தியமங்கலத்தில் பிடிபட்டு டாப்ஸ்லிப் கொண்டு வரப்பட்ட கலீம் கும்கியாக மாற்றப்பட்டது.

பழனியப்பா என்ற யானை பாகன், கலீம் பிடிபட்ட வனத்துறை வசம் வந்த வெறும் 45 நாளில் ட்ரைனிங் செய்யப்பட்டு கும்கியாக மாற்றினார். சத்தியமங்கலத்தில் முரட்டு தாதாவாக வலம் வந்து, வருவோர் போவோரை குலை நடுங்க வைத்த கலீம், கும்கியாக மாற்றப்பட்ட பின்னர் குழந்தையாக மாறிவிட்டது. ஆனாலும் அவன் ஆப்ரேசனில் களம் இறங்கினால் இன்றும் தாதாக்களின் தளபதியாகத்தான் வலம்வருகிறது.



நல்லவனுக்கு நல்லவன்.. கெட்டவனுக்கு கெட்டவன் இந்த கலீம்..!

யானை ஆபரேசன்களில் எடுத்த முடிவிலிருந்து எந்நிலையிலும் பின் வாங்காத அசாத்திய தைரியசாலி. எத்தனை யானைகள், காட்டு விலங்கினங்கள் எதிர்த்து வந்தாலும், நம்பி உடன் வருபவர்கள் நூறுபேராயினும் அவர்களை பாதுகாக்கும், பாதுகாப்பு அரண் இந்த கலீம் கும்கி யானை.



ஒருமுறை வனத்தில் யானை ஆபரேஷன் பணிகள் நடந்து வந்த நிலையில், அடர் வனத்தில் மறைந்திருந்த காட்டு யானை பழனிச்சாமி என்பவரை தும்பிக்கையால் தூக்கி வீச முற்பட்ட நிலையில், அதனை முன்பே கணித்த கலீல், காட்டு யானை பழனிச்சாமியை தூக்கும் முன், கலீம் பாதுகாப்பாக பழனிச்சாமியை தூக்கி நகர்த்தி பாதுகாத்திருக்கின்றான்.

அந்த காட்டு யானையையும் வெகு தூரம் ஓடவிட்டது இந்த கலீம். இப்படி களத்தில் கரடு முரடாக இருந்தாலும் பழகுவோரிடம் பச்சிளம் குழந்தையாக மாறி பாச மழை பொழியும் கலீம் கும்கி யானை பாகனின் கண் அசைவுக்கு கட்டுப்படுகிறது. ஊருக்குள் உலா வருகின்ற காட்டு யானைகளை விரட்டவோ, பிடிக்கவோ கும்கி முற்படும்போது தனக்கு நிகரான பலசாலி அல்லது சர்வ பலம் பொருந்திய யானைகளை கலீம் துணிவுடன் எதிர்கொண்டு களமாடுவதில் வல்லவன்.

சேட்டை செய்யும் யானைகளை இனி வாழ்நாளில் ஒருபோதும் சேட்டை செய்யாத அளவுக்கு சம்பவம் செய்வதில் சிறந்தவன். அப்படிப்பட்ட சுபாவம் கொண்ட கலீமுக்கு இன்னொரு முகமும் உண்டு. தன்னை விட வயதில் இளைய யானை , பலம் குறைந்த யானை வந்தால் அதனை அரவணைத்து கொள்வான். அதன் பின்னரே பாகனின் ஆணைக்கிணங்க அந்த யானைகளை சாமர்த்தியமாக விரட்டும் குணமும் கொண்டது

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...