உடுமலை அரசு மருத்துவமனையில் இருசக்கர வாகனங்களால் இடையூறு - அவசர ஊர்திகள் செல்வதில் சிக்கல்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில் அவசர ஊர்திகள் செல்லும் பாதையின் இருபுறமும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதில் சிக்கல் ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் 18 மலைவாழ் குடியிருப்புகளைச் சேர்ந்த பொதுமக்கள் உடல் உபாதைகளுக்கு தினமும் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை செல்லும் பகுதியில் தாறுமாறாக இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் தமிழக அரசின் 108 அவசர ஊர்தி வாகனங்களும், தனியார் அவசர ஊர்திகளும் உள்ளே செல்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுவருகிறது.



இதை முறையாக கண்காணிக்க வேண்டிய அரசு மருத்துவமனை ஊழியர்கள் அவசர ஊர்திகளை நிறுத்தி விட்டு வாருங்கள் என அலட்சியமாக பதில் தெரிவித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை உடல்நலம் பாதிக்கப்பட்டவரை தமிழக அரசின் 108 அவசர ஊர்தி கொண்டுவந்தபோது, இருசக்கர வாகனங்கள் இருபுறமும் நிறுத்தப்பட்டிருந்ததால் அவசர சிகிச்சைக்கு செல்லமுடியாத நிலை உருவானது.



அதுமட்டுமின்றி, இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்த மருத்துவமனை ஊழியர்கள் நடவடிக்கை எடுக்காததால், பாதிக்கப்பட்ட நோயாளியை வீல் சேரில் வைத்து, அவசர ஊர்தி ஓட்டுநர்களே அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அங்கு வந்திருந்த பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

அவசர ஊர்தி செல்லும் பாதையில், இரு சக்கர வாகனங்கள் இடைமறித்து நிறுத்தப்படுவதைத் தடுக்க சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மற்றும் ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் 108 அவசர ஊர்தி ஓட்டுனர்களும், தனியார் அவசர உறுதி ஓட்டுநர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...