பல்லடம் அருகே அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம விலங்கு - பரபரப்பு

பல்லடம் அடுத்த கரடிவாவி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் புகுந்த மர்ம விலங்கு ஒன்று கதவின் கண்ணாடிகளை உடைத்து உள்ளே இருந்த கணினி உள்ளிட்ட பொருட்களையும் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம விலங்கால் மருத்துவர்கள் செவிலியர்கள் பீதி அடைந்தனர்.

பல்லடம் அருகே கரடிவாவி பகுதியில் கே.ஜி.எல் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு இந்த மருத்துவமனையில் உள்ள கதவின் கண்ணாடியை உடைத்து மர்ம விலங்கு ஒன்று உள்ளே புகுந்துள்ளது.



உள்ளே புகுந்த மர்ம விலங்கு மருத்துவமனையில் இருந்த கணினி மற்றும் கதவுகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளது. இந்நிலையில் காலையில் பணிக்கு வந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் மருத்துவமனைக்குள் திருடன் புகுந்ததாக எண்ணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.



அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த காமநாயக்கன் பாளையம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஒரு விலங்கின் கால் தடம் உள்ளே இருப்பதை கண்டுள்ளனர். மேலும் கதவை கடித்த பல் தாரை இருந்ததையும், கணினியை கடித்து வீசியதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.



இதனையடுத்து மருத்துவமனைக்குள் புகுந்தது மர்ம விலங்கு தான் என்று உறுதிப்படுத்தினர். இதனால் வனத்துறையினரையும் வரவழைத்து விசாரணை மேற்கொண்டதில் இது மர்ம விலங்கின் செயல் என்று உறுதிப்படுத்தப்பட்டு இதற்கான விசாரணையை தீவிரபடுத்தி உள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்பகுதியில் சிறுத்தை உலவுவதாக செய்தி வெளியான நிலையில் நேற்றிரவு மர்ம விலங்கு மருத்துவமனைக்குள் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மருத்துவமனையின் கட்டிடம் அனைத்து வசதிகள் கொண்டதாக இருந்தாலும் அதற்கான உபகரணங்களும் அதற்கான செயல்பாடுகளும் இன்றியும் சுற்றுச்சுவர் கூட இன்றி பழுதடைந்து உள்ளது.

மேலும் சிசிடிவி கேமரா இருந்தும் பயனில்லாமல் பதிவு செய்ய முடியாமல் செயலிழந்து உள்ளது. இந்த மருத்துவமனையை பாதுகாத்து தரம் உயர்த்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...