உடுமலை அரசினர் ஆய்வு மாளிகை முன்பு குடிமகன்கள் நடமாட்டம்!

உடுமலை அரசினர் ஆய்வு மாளிகை முன்பு உள்ள திறந்தவெளி சாக்கடையில் மது பிரியர்கள் அடிக்கடி விழுந்து விடுவதால் உடனடியாக அதனை மூட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசினர் ஆய்வு மாளிகைக்கு அருகே உள்ள திறந்தவெளி சாக்கடையை உடனடியாக மூட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

உடுமலை அருகேயுள்ள தளி சாலையில் அரசினர் ஆய்வு மாளிகை அமைந்து உள்ளது. இந்த ஆய்வு மாளிகைக்கு உடுமலை பகுதியில் ஆய்வு செய்வதற்காக வரும் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் தங்குவதற்காக இந்த ஆய்வு மாளிகை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஆய்வு மாளிகை முன்பு திறந்தவெளி சாக்கடை அமைக்கப்பட்டு உள்ளதால் கொசுத் தொல்லை அதிகரித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.



இதனிடையே அந்த பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் மது அருந்தும் மது பிரியர்கள் போதையில் தள்ளாடி ஆய்வு மாளிகை முன்பு உள்ள சாக்கடையில் அடிக்கடி விழும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக இதுவரை மூன்று பேர் அந்த திறந்தவெளி சாக்கடையில் விழுந்து உள்ளனர். இதனால் ஆய்வு மாளிகைக்கு வரும் அதிகாரிகள் முகம் சுளித்தவாறு சென்று வருகின்றனர்.

இதன் காரணமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மாளிகை முன்பு உள்ள திறந்தவெளி சாக்கடையை உடனடியாக மூடவேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பிலும் ஆய்வு மாளிகை தரப்பிலும் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...