கோவை கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேர் அரக்கோணம் நீதிமன்றத்தில் சரண்!

கோவையில் துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்ட சத்திய பாண்டியன் என்பவர் கொலை வழக்கில் தொடர்புடையை சஞ்சய்குமார், காஜா உசேன், ஆல்வின் மற்றும் சல்பல்கான் உபயத்துல்லா ஆகியோர், அரக்கோணம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். 15 நாட்கள் நீதிமன்ற காவலில் 4 பேரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.


கோவை: கோவையில் துப்பாக்கியால் சுட்டு இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் அரக்கோணம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சத்திய பாண்டியன் என்ற நபரை மர்மநபர் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் படுகொலை செய்யப்பட்ட சத்திய பாண்டியன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். பிரேதப் பரிசோதனையில் அவர் உடலில் 20 இடங்களில் வெட்டுக்காயம் இருந்தது தெரிய வந்தது. இது மட்டுமின்றி உடல்கூறு ஆய்வில் சத்திய பாண்டியன் உடலில் புல்லட்டுகள் இருந்ததும் தெரிய வந்தது.

அதன் அடிப்படையில் சத்திய பாண்டியன் மர்ம நபர்களால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து பந்தய சாலை போலீசார் வழக்கு பதிவு செய்தி விசாரித்து வந்த நிலையில் குற்றவாளி தலைமறைவாக இருந்தனர்.

இந்த நிலையிலே இன்று கொலை வழக்கில் தொடர்புடைய சஞ்சய்குமார்(23), காஜா உசேன்(23), ஆல்வின்(34) மற்றும் சல்பல்கான் உபயத்துல்லா(23) உட்பட நான்கு அரக்கோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி ஷகீரா பானு முன்னிலையில் சரணடைந்தனர்.

இவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ஷீகீரா பானு உத்தரவிட்டார். இதனையடுத்து நால்வரையும் அரக்கோணம் நகர காவல்துறையினர் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்க பாதுகாப்பாக அழைத்து சென்றனர்கள்.

இந்த நிலையில் சத்தியப் பாண்டியன் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து விசாரித்தபோது, முன்பகை காரணமாக கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது . கட்டப்பஞ்சாயத்து நடைபெறும் இடங்களில் இந்து முன்னணி பிரமுகர் பிஜி கொலை வழக்கில் கைதாகி வெளியே வந்திருந்த சத்திய பாண்டியன் ரியல் எஸ்டேட் முதலாளி ஒருவருக்கு ஓட்டுநராக இருந்த நிலையில் அவ்வப்போது கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபட்டிருக்கின்றார்.

கட்டப்பஞ்சாயத்து செய்து வரும் மற்றொரு நபரான சஞ்சய் மற்றும் சத்திய பாண்டியன் பல்வேறு விவகாரங்களில், எதிர் முனையில் அமர்ந்து பஞ்சாயத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

குற்றப் பின்னணியில் வலம் வருகின்ற இருவரும் எதிர்த்தரப்பிலிருந்து அவ்வப்போது கட்டப்பஞ்சாயத்து செய்து பிரச்சினையில் ஈடுபட்டு வந்த நிலையில் இருவரும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் காவல் எடுத்து விசாரிக்கும் போது கொலைக்கான பின்னணி குறித்துமேலும் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தருக்கின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...