பயிர் நூற்புழுக்களை அறிய மண் மாதிரிகள் எடுக்கும் முறைகள்

பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்கள் சிறு மண் துகள்களிடையே உள்ள இடைவெளியிலும் மண்துகள்களில் ஒட்டிய மெல்லிய நீர்ப்படலத்திலும் இருந்து கொண்டு வாழ்பவை. இவ்வகை நூற்புழுக்களை அறிய அதற்கேற்றாற் போல் மண் மாதிரிகளை எடுக்க வேண்டும். மண்ணின் சத்துக்களை அறிய எடுக்கப்படும் மாதிரிகளுக்கும், நூற்புழுக்களை அறிய எடுக்கும் மாதிரிகளுக்கும் அடிப்படையில் மிகுந்த வேறுபாடு உள்ளது.

நூற்புழுக்களை அறிய எடுக்கப்படும் மண் மாதிரிகள் உறிஞ்சு வேர்களை ஒட்டியுள்ள வேரண்மைப் புலத்தில் இருந்து சேகரிக்க வேண்டும். மண்மாதிரிகள் நிலத்தில் பயிர் உள்ள போதும், பயிர் இல்லாத போதும் எடுக்கலாம். பயிர்க் காலத்திற்கு முன்பு எடுக்கப்படும் மாதிரிகளில் இருந்து என்ன வகையான நூற்புழுக்கள் மண்ணில் உள்ளன எனவும் அவற்றின் எண்ணிக்கையையும் அறிந்து அதற்கேற்ப நூற்புழு நிர்வாகத்தை மேற்கொள்ளலாம்.

மாதிரிகள் எடுக்கும் முறைகள்

நிலத்தில் பயிர்கள் இருப்பின், பயிரின் வேர்ப் பரவலைப் பொறுத்து, மேல் மண்ணை இரண்டு அங்குலம் நீக்கிவிட்டுப் பின் 3-6 அங்குல ஆழத்தில் செடியில் இருந்து 4 அங்குலம் தள்ளி, எடுக்கலாம். 

வாழை போன்ற பயிர்களில் மரத்தில் இருந்து 1 – 1½ அடி ஆழத்தில் மண் மாதிரிகள் எடுக்க வேண்டும். மண்ணுடன் சேர்த்து வேர்த் துண்டுகளையும் எடுக்க வேண்டும். இதில் இருந்து வேரில் ஊடுருவியுள்ள நூற்புழுக்களையும் அறியலாம்.

எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்ற பயிர்களுக்கு மரத்தின் நிழல் வட்டக் கோட்டருகே 1½ - 2 அடி ஆழத்தில் மண் மாதிரிகள் எடுக்க வேண்டும் ஏனெனில் இங்குதான் புதிய உறிஞ்சு வேர்கள் உள்ளதால், நூற்புழுக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.

தென்னைக்கு 75 செ.மீ ஆழத்திலும் பாக்குக்கு 50 செ.மீ ஆழத்திலும் மரத்தில் இருந்து 75 செ.மீ தள்ளி மாதிரிகள் எடுக்க வேண்டும். மண் மாதிரிகள் எடுக்க ஷவல் எனப்படும் கைக் கொத்து சிறந்தது. மண்வெட்டி கொண்டும் எடுக்கலாம்.

மண் மாதிரிகளின் அளவு

மண் மாதிரிகளை நான்கு அல்லது ஐந்து செடிகளின் வேரிண்மைப் புலத்தில் இருந்து எடுத்து இவற்றை ஒன்று சேர்த்து சுமார் 250 கிராம் அளவுகளில், பாலிதீன்பைகளில் இட்டு, அவற்றுடன் பயிர், முந்தியப் பயிர், பயிரின் வயது, ஊர் ஆகிய விபரங்களுடன் அனுப்பவும். மண் மாதிரிகள் இலேசான ஈரப்பத்துடன் இருப்பது நல்லது.

மண்மாதிரிகளைப் பாpசோதனைக்கு எங்கு அனுப்புவது

சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை ‘பேராசிரியர் மற்றும் தலைவர், நூற்புழுவியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர் - 641 003 என்ற முகவரிக்கு அனுப்பலாம் அல்லது பல்கலைக்கழகத்தின் மதுரை, பெரியகுளம், திருச்சி, உதகை ஆகிய நூற்புழு ஆய்வகங்களுக்கு அனுப்பி, நூற்புழுக்கள் பற்றிய விளக்கம் மற்றும் பரிந்துரைகளை இலவசமாகப் பெறலாம்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...