கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் எலி பேஸ்ட் சாப்பிட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் மனைவி உடன் ஏற்பட்ட தகராறால் மனமுடைந்த கண்ணன் என்பவர் கடந்த 12ஆம் தேதி எலி பேஸ்ட் சாப்பிட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் எலி பேஸ்ட்டை சாப்பிட்ட நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை ரத்தினபுரியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கண்ணன் சொந்தமாக கால்டாக்சி வைத்து ஓட்டி வந்துள்ளார். கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் மனமுடைந்த கண்ணன் எலி பேஸ்ட் உண்ட நிலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் கால் டாக்சியில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...