பல்லடம் அருகே கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலியான சோகம் - போலீசார் விசாரணை

பல்லடம் - மங்கலம் சாலையில் கட்டுமான பணியின்போது டிரில்லிங் இயந்திரத்தின் ஒயர் அறுந்ததில் மின்சாரம் தாக்கி முத்துக்குமார் என்ற கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கியதில் கட்டிடத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் அருகேயுள்ள ஆலூத்துபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முத்துக்குமார். இவருக்கு மைதிலி என்ற மனைவியும், மவுலிஷ் என்ற மகனும் உள்ளனர்.



இந்நிலையில், கூலி தொழிலாளியான முத்துக்குமார், பல்லடம் - மங்கலம் சாலையில் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனிடையே இன்று பிற்பகல் ஊட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சசிகுமார் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் கட்டிடத்திற்கு அஸ்திவாரம் போடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது குழி எடுக்கும் பணியின் போது ட்ரில்லிங் மெஷினை பயன்படுத்தி உள்ளனர்.



எதிர்பாராத விதமாக டிரில்லிங் மிஷின் மின்சார கம்பி அறுந்ததால் முத்துக்குமார் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.



அவருடன் பணிபுரிந்த மற்றொரு ஊழியர் மின் இணைப்பை துண்டிக்க முயற்சித்தும், முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மின் இணைப்பை துண்டிக்க சென்றதால் முத்துக்குமாருடன் பணியாற்றிய சசிகுமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.



இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் முத்துக்குமாரின் உடலை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...