கோவை கோபாலபுரத்தில் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கு - கைதானவர்களுக்கு மார்ச் 1 வரை நீதிமன்ற காவல்

கோவை கோபாலபுரம் அருகே பட்டப்பகலில் ஒருவரை கொலை செய்த வழக்கில், கைது செய்யப்பட்டவர்களை வரும் மார்ச் 1ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்ற உத்தரவு.



கோவை: கோவை மாவட்டம் கோபாலபுரத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான நபர்களை வரும் மார்ச் 1ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கோபாலபுரத்தில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் கோவையை சேர்ந்த ரவுடி கோகுல் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மனோஜ் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து நேற்று கோத்தகிரியில் 7 பேரை கைது செய்தனர். கைது செய்யபட்டவர்களை கோவை அழைத்து வரும்போது கௌதம், ஜோஸ்வா ஆகிய இருவரும் மேட்டுபாளையம் அருகே தப்பிச்செல்ல முயன்றபோது இருவரையும் துப்பாக்கியில் சுட்டு கைது செய்தனர்.

இதனையடுத்து இருவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இதனிடையே இந்த வழக்கில் கைது செய்யபட்ட டேனியல், ஹரி என்ற கௌதம், பரணி சௌந்தர், அருண்குமார், சூர்யா ஆகிய ஐந்து பேரையும் கோவை மாநகர போலீசார், பாதுகாப்புடன் அழைத்து வந்து கோவை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருத்திகா 5 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து ஐவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Links:




கோவை நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக் கொலை - மர்மநபர்கள் தப்பியோட்டம்

கோவை நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் இளைஞர் படுகொலை - செல்போன் வீடியோ வெளியீடு

கோவை கோபாலபுரம் இளைஞர் கொலை - தப்பியோடிய இளைஞர்களை சுட்டுப்பிடித்த போலீசார்!

கோவை நீதிமன்றம் அருகே பட்டபகலில் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கு - கோத்தகிரியில் 7 பேரை கைது செய்த போலீசார்!


Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...