உடுமலை அருகே நீர் வழிப்பாதையை மீட்கக் கோரி பொதுமக்கள் தாசில்தாரிடம் மனு

உடுமலை அருகே மழைநீர் செல்லும் பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை மீட்கக் கோரி பொதுமக்கள் உடுமலை தாசில்தார் கண்ணாமணியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்பை மீட்க கோரி தாசில்தாரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.

உடுமலை அருகேயுள்ள கொடிங்கியம் ஊராட்சிக்குட்பட்ட வளையம்பாளையம் கிராமத்தில் காலம் காலமாக இருந்து வரும் பொது நீர்வழிப் பாதையைத் தனி நபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வடியாமல், விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் சேதமாகிறது.

எனவே நீர்வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, மழைநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் உடுமலை தாசில்தார் கண்ணாமணியிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...