உடுமலை அருகே குளங்களில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் - சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

உடுமலையில் நீர்நிலைகளை பாழாக்கும் விதமாக குளங்களில் குப்பைகள் கொட்டுகின்றனர், சிலர் குப்பைகளை குளங்களின் ஓரங்களில் கொட்டி எரிக்கும் சம்பவங்களும் அரங்கேறுகின்றது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.


திருப்பூர்: உடுமலையில் நீர்நிலைகளின் அருகே குப்பைகளை கொட்டி தீ வைக்கப்படும் சம்பவங்களை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, சமீப காலங்களாக நீர் நிலைகள் பாதுகாப்பில் காட்டப்படும் அலட்சியம் வருங்காலத்தில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் அம்சமாக மாறிவிடும் அபாயம் உள்ளது.

பல பகுதிகளில் உள்ள மழைநீர் ஓடைகள் சாக்கடைக் கால்வாய்களாக மாற்றப்பட்டு விட்டன. வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் நீர்நிலைகளில் கலக்கப்படுவதால் இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது.

உடுமலை நகருக்கு அருகில் ஏழு குளப்பாசனக் குளங்களில் ஒன்றான ஒட்டு குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் உபரிநீர் தங்கம்மாள் ஓடை வழியாக வழிந்து சென்று உப்பாறு ஓடையில் கலந்து உப்பாறு அணையை அடைகிறது.

இந்த குளத்தை நம்பி பல விவசாயிகள் தென்னை, வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்துள்ளனர். இந்த குளத்தில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது.

அதிலும் வெட்டி அகற்றப்பட்ட தென்னை மரங்கள், வாழை மரங்கள் போன்ற விவசாயக் கழிவுகளை டிராக்டர்கள் மற்றும் லாரிகளில் வந்து ஒட்டுக்குளத்துக்குள் கொட்டி விட்டுச் செல்கிறார்கள்.

மேலும் அவ்வப்போது இந்த கழிவுகளை தீ வைத்துக் கொளுத்தி விடுகிறார்கள். இதனால் குளத்து நீர் மாசடைவதுடன் காற்று மாசு ஏற்படவும் காரணமாகிறது.

இதுதவிர பல ஓடைகள் மற்றும் குளங்கள் போன்ற நீர்நிலைகளில் கோழி கழிவுகள் மற்றும் கட்டிடக் கழிவுகளைக் கொட்டி நீர் நிலைகளைப் பாழாக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. நீர் நிலைகளைப் பாழாக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

நீர்நிலைகள் என்பது மனிதர்களுக்கானது மட்டுமல்ல மீன்கள், தவளைகள், பறவைகள், விலங்குகள் உள்ளிட்ட அனைத்து விதமான உயிர்களுக்கும் பொதுவானது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...