பல்லடம் அருகே இரவில் கிராம நிர்வாக அலுவலரை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் - பரபரப்பு

பல்லடம் அருகே புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள வீடுகளை காலி செய்யக்கோரி இரவில் நோட்டீஸ் வழங்க வந்த கிராம நிர்வாக அலுவலரை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.



திருப்பூர்: துத்தேரிப்பாளையம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலரை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கள்ளிப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட துத்தேரிப்பாளையம் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 150 ஆண்டுகளாக வசித்து வருகின்றன. இங்கு கட்டப்பட்டுள்ள 63 வீடுகள் நீர்நிலை புறம்போக்கில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் வருவாய் துறை சார்பில் துத்தேரிப்பாளையம் கிராமத்தில் நீர்நிலை புறம்போக்கில் அமைந்துள்ள வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

ஆனால் கிராம மக்கள் மற்றும் வருவாய்த்துறை இடையே நடந்த பேச்சுவார்த்தையில் மூன்று மாத காலம் அவகாசம் அளிக்குமாறும் மாற்று இடம் வழங்குமாறு கிராம மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். மூன்று மாதங்கள் கழித்து கிராம மக்களுக்கு வழங்கிய கால அவகாசம் முடிந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாதன் மீண்டும் வீடுகளை காலி செய்யக்கோரி அறிவிப்பானை வழங்குவதற்காக இன்று இரவு நேரத்தில் வந்திருக்கிறார்.

வீட்டை காலி செய்ய முடியாது, அறிவிப்பாணையை வாங்க மறுத்ததால் வீட்டு சுவற்றில் ஒட்ட முயன்றுள்ளார்.



அப்போது ஆத்திரமடைந்த கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலரையும் அவரது காரையும் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



மேலும் கிராமத்தின் நுழைவு வாயிலில் சாலை முழுவதும் கற்களை அடுக்கி வாகனம் வெளியே செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் வட்டாட்சியர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.



நீதிமன்ற உத்தரவுப்படி, நீர்நிலை புறம்போக்கில் குடியிருக்க அனுமதிக்க முடியாது எனவும், அறிவிப்பாணை வழங்க வந்த வருவாய்த்துறை அதிகாரிகளை சிறைபிடிப்பது தவறு எனவும், நாளை பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தையில் முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைக்குப் பிறகு கிராம நிர்வாக அலுவலரின் வாகனம் விடுவிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...