கோவை மாவட்ட அரசுப் பள்ளிகளில் குறும்படம் திரையிடல் - மாணவர்களிடம் ரூ.10 வசூலிப்பதாகக் குற்றச்சாட்டு

கோவை மாவட்டத்தில் உள்ள 11 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நாளை நமதே எனும் குறும்படம் திரையிடலுக்காக மாணவர்களிடம் தலா 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு. கல்விக் கட்டணமில்லாமல் இலவச புத்தகங்களோடு நலத்திட்ட உதவிகளை அரசு வழங்கி வரும் நிலையில், ஒரு குறும்படத்திற்கு பணம் வசூலிப்பது வேதனை அளிப்பதாக கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் அறிக்கை.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 11 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து வந்த தொழில் நுட்ப கலைஞர்களை கொண்டு நாளைநமதே என்ற குறும்படம் திரையிடப்பட்டது. ஆடிட்டேரியம் வசதி இல்லாத பள்ளிகளில் திறந்த வெளி ஆடிட்டேரியத்தில் அதிக வெளிச்சமான ஓபன் ஸ்டேடியத்தில் இந்தப் படம் திரையிடப்பட்டது. இதற்கு, அரசுப் பள்ளி மாணவர்களிடம் ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்பட்டதாக கலை ஆசிரியர்கள் நலச்சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.



இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திறந்தவெளியில் திரையிடப்பட்ட இந்தப் படத்தில் அதிக வெளிச்சம் காரணமாக உருவமே சரியாக தெரியவில்லை. படம் துவக்கத்திலேயே திரையில் தேசிய கொடியை‌ காண்பித்துக் தேசிய கீதம் திரையில் ஒலிக்கப்பட்டது.

மாணவர்கள் உட்கார்ந்த நிலையில் கை தட்டிக் கொண்டிருந்தனர். ஆசிரியர்கள் அங்கும் இங்குமாக நடந்த வண்ணம் இருந்தனர். "நாளைநமதே" குறும்படம் ஒரு மணி நேர படமாக வடிவமைக்கப்பட்டது.

இதில். ஒரு பெண் கர்ப்பமாக இருப்பது போலவும், இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றது போலவும், பெண் குழந்தைஎன்ற உடன் கணவன் கை விட்டது போலவும்‌ அந்த குழந்தைகளைப் பெற்ற தாய் சிறிது காலத்தில் இறந்து விட்டதால், அந்த குழந்தையை ஒரு ஆசிரியை காப்பகத்தில் வைத்து வளர்த்து பெரிய அதிகாரியாக உயர்த்தியதாக கதை அமைந்தது.

கல்வி தொலைக்காட்சி, இல்லம் தோறும் கல்வி என அரசின் திட்டங்கள் உள்ளபோது வெளிச்சமான இடத்தில், முகமே சரியாக தெரியாத படத்துக்காக அரசு பள்ளி மாணவர்களிடம் தலா 10 ரூபாய் வசூல் என்றால் இது அரசு பள்ளியா?? இல்லை தனியார் பள்ளியா?? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், கல்விக் கட்டணம் இல்லை, இலவச புத்தகங்கள், நலத்திட்டஉதவிகள் என அரசு வழங்கும் நிலையில், ஒரு குறும்படம் காட்ட மாணவருக்கு 10ரூபாய் வசூலிப்பது வேதனை அளிக்கிறது. இது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலரும் கண்டுகொள்ளவில்லை எனகலை ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் தமது அறிக்கையில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...