தாராபுரத்தில் போக்குக் காட்டும் ராட்சத முதலை - பிடிக்க முடியாமல் திணறும் வனத்துறை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி ஆற்றில் சுற்றித்திரியும் 11 அடி நீள ராட்சத முதலையைப் பிடிக்கும் வனத்துறையினரின் முயற்சி 2வது நாளாகத் தோல்வியில் முடிந்தது. ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் முதலையை வலை வீசி பிடிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.



திருப்பூர்: தாராபுரம் அமராவதி ஆற்றில் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் கோவில் அருகே ஆழமான பகுதியில் சுமார் 11 அடி நீளம் உள்ள ராட்சத முதலை ஒன்று நடமாடிவந்தது.கடந்த 15 நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்திவந்த முதலை குறித்து தாராபுரம் நகராட்சி நிர்வாகம் சார்பில் மாவட்ட வனத்துறை அதிகாரிக்கு புகார் அளிக்கப்பட்டது.



அதன் அடிப்படையில் கடந்த மூன்று நாட்களாக அமராவதி ஆற்றில் காங்கேயம் வனச்சரகர் தனராஜ் தலைமையில் 10 பேர் அடங்கிய வனத்துறை குழுவினர் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேடுதல் வேட்டையின்போது முதலைக்காக விரித்து வைக்கப்பட்டிருந்த வலையை அறுத்துக் கொண்டு முதலை தப்பியது. இதனால், தேடுதல் பணி தொய்வடைந்தது.



இந்நிலையில், நேற்று காலை 10 மணி முதல் மீண்டும் வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.



காலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை அமராவதி பழைய பாலம் அகஸ்தீஸ்வரர் கோவில் அருகே தண்ணீருக்குள் தலையை நீட்டி படுத்திருந்த முதலை அதற்குப்பின் தலைமறைவானது. இதனால் ஆற்றின் கரையோரம் முதலையை எதிர்பார்த்து இரவு வரை காத்திருந்த வனத்துறையினர் முதலையின் இருப்பிடம் தெரியாததால் 2வது நாள் முயற்சியும் தோல்வியில் முடிவடைந்தது.

ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் முதலையை வலை வீசி பிடிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாள் தேடுதல் வேட்டையிலும் முதலை பிடிக்கப்படாமல் இருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...