வஃக்பு வாரிய சொத்து மீட்பு விவகாரம் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதிய திட்டம்!

தமிழகத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள வஃக்பு வாரிய சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொள்ளாச்சியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



கோவை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 75வது பவள விழாவை முன்னிட்டு அகில இந்திய மாநாடு சென்னையில் வரும் மார்ச்மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுப் பணிகள் குறித்து நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது.



இதில் பொள்ளாச்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில இளைஞரணி தலைவர் முகமது யூனுஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, வரும் மார்ச் மாதம் சென்னையில் நடைபெற உள்ள 75வது பவள விழா மாநாட்டில், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் பல ஆண்டுகளாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும், இட ஒதுக்கீடு மூன்றரை சதவீதத்தை உயர்த்தி ஏழு சதவீதமாக உயர்த்தவும் வலியுறுத்தப்படும் என்று அவர் கூறினார்.

மேலும், இளைஞர்களை நல்வழிப்படுத்த மது, கஞ்சா போன்ற போதைப்பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட தீர்க்கமான திட்ட ஆய்வை மாநாட்டில் பதிவு செய்யவுள்ளதாகக் கூறிய முகமது யூனுஸ், தமிழகத்தில் ஆக்கிரமிப்பில் உள்ளவஃக்பு வாரியத்திற்கு சொந்தமான சொத்துக்களை மீட்டெடுக்க போதுமான பணியாளர்கள் இல்லை என்றும்,

சிறந்த அலுவலர்களைநியமித்து வஃக்பு வாரிய சொத்துக்களை மீட்டெடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநாட்டில் வலியுறுத்தப்படவிருப்பதாகத் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...