கோவையில் காதலிப்பதாகக் கூறி பள்ளி மாணவி கடத்தல் - போக்சோ வழக்கில் தனியார் பேருந்து நடத்துநர் கைது!

கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி கடத்தியதாக, பல்லடத்தை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் சபரிநாதன் என்பவர் போக்சோ வழக்கில் துடியலூர் போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் குடியிருந்து வேலை செய்து வருகிறார். இவருக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் அந்தப் பெண் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த வாரம் பள்ளிக்கு சென்ற மாணவி, வீடுதிரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் மாணவி கிடைக்காததால், துடியலூர் காவல் நிலையத்தில் தாய் அனு புகார் தெரிவித்தார். அந்தப் புகாரில், தனது மகள், பேருந்து நடத்துநர் ஒருவருடன் சென்று இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்து இருந்தார்.



அதைத்தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த துடியலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர், பல்லடத்தைச் சேர்ந்த சபரிநாதன் என்பவரை கைது செய்து சிறுமியை மீட்டனர். கடந்த ஒருமாதமாக காதலிப்பதாக கூறி சபரிநாதன், சிறுமியை கடத்தி சென்றதும், தனியார் பேருந்தில் அவர் நடத்துநராக வேலை செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற சபரிநாதன் மீது, போக்சோ வழக்கு பதிவு செய்த துடியலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர், அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கைதான சபரிநாதனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...