கோவை அருகே காரமடையில் ரூ.2.67 கோடியில் புதிய தடுப்பணை - அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார் எம்.பி., ஆ.ராசா!

கோவை மாவட்டம் காரமடை மேற்கு பகுதியில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை சேமிக்கும் வகையில் ரூ.2.67 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை கட்டுமான பணியை தொடக்கி வைத்த எம்பி ஆ.ராசா, இந்த திட்டம் முழுமை பெறும்போது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார்.



கோவை: கோவை மாவட்டம் காரமடையின் மேற்கு பகுதிகளான தோலம்பாளையம், வெள்ளியங்காடு, தாயனூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5000 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வாழை, தென்னை, கரும்பு, காய்கறிகள், சிறுதானியங்களை விவசாயிகள் உற்பத்தி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த பகுதியில் மலைத்தொடர்கள் உள்ள நிலையிலும், கோடை காலங்களில் பெரிய அளவில் வறட்சி ஏற்படுவதாலும் விவசாயம் பாதிக்கப்படும் சூழல் இருந்துவருகிறது. எனவே, மழைக்காலங்களில் மலைத்தொடரில் இருந்து வரும் மழை நீரினை தடுத்து, அதன் மூலம் ஆழ்குழாய் கிணறு, பாசன கிணறுகளுக்கு தண்ணீர் மேம்படுத்தும் விதமாக தடுப்பணை கட்டித்தர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துவந்தனர்.



இதனையடுத்து, பெரிய பள்ளம் பகுதியில் சுமார் 2 கோடியே 67லட்சம் மதிப்பில் 2மீட்டர் உயரம் 26 மீட்டர் நீளத்தில் புதிய தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த தடுப்பணைக்கான அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது.



இதில், நீலகிரி தொகுதி எம்.பியும், திமுக துணைப்பொதுச்செயலாளருமான ஆ.ராசா கலந்து கொண்டு தடுப்பணை கட்டும் இடங்களை பார்வையிட்டு, கட்டுமான பணிகளை துவங்குவதற்கு அடிக்கல் நாட்டினார். இந்த திட்டம் முழுமை பெறும்போது விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என ஆ.ராசா தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...