உடுமலை அரசுப்பள்ளியில் தமிழ் கண்காட்சி - பார்வையாளர்கள் உற்சாகம்!

உடுமலை அருகே சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் கண்காட்சியில் வைக்கப்பட்ட படைப்புகளை பார்த்து பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம், சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவர்களின் கைத்திறன்களையும், கலைநயத்தையும் தமிழுடன் சேர்த்து வெளிப்படுத்தும் வகையிலான தமிழ் கண்காட்சி நடந்தது.



பள்ளித் தலைமை ஆசிரியர் கோப்பெருந்தேவி கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். ஆசிரியர்கள் அனைவரும், வகுப்பு மாணவர்களை ஊக்குவித்து, தமிழ் பழமையை போற்றும் புதிய படைப்புகள் கண்காட்சியில் வைக்கப்பட்டது.



சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், மூவேந்தர்களின் வீரம், கால்நடை வளர்ப்பு, விவசாயம், பாரம்பரிய உணவு தானியங்கள், வீரப்பெண்கள், கோவில்களின் சிறப்பு, வரலாற்று சிறப்புமிக்க கட்டமைப்புகள், கவிஞர்கள், புலமை, பாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு படைப்புகளை சார்ட்களாகவும், படைப்புகளாகவும் புதுவிதமாக காட்சிப்படுத்தினர்.



இயல், இசை, நாடகத்தமிழை கண்முன் விருந்தளிந்து பார்வையாளர்களை கவர்ந்தனர். இந்தக் கண்காட்சியை, பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் உடுமலை தமிழிசை சங்கத்தினர், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், கல்லுாரி மாணவர்கள், பள்ளி மாணவர்களின் பெற்றோர் உட்பட பலர் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...