கோவை குப்பைத்தொட்டியில் ஒன்றரை மாத ஆண் குழந்தை மீட்பு - போலீசார் விசாரணை

கோவை மாவட்டம் திருமலைநாயக்கன்பாளையத்தில் குப்பைதொட்டியில் கிடந்த ஒன்றரை மாத ஆண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. குழந்தையை வீசிச் சென்றவர் யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.



கோவை: கோவை திருமலைநாயக்கன்பாளையம் அருகே பெண் ஒருவர் குப்பைகளை பொறுக்கிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கிருந்த சாக்கடை அருகே ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது.

அவர் அங்கு சென்று பார்த்தபோது சுமார் ஒன்றரை மாதம் ஆன நிலையில் ஆண் குழந்தை ஒன்று குப்பையில் வீசப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் அளித்த தகவலின் பெயரில், அருகில் இருந்து பொதுமக்கள் பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து குழந்தையை குப்பைத் தொட்டி அருகே வீசி சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குப்பை தொட்டியில் ஒன்றரை மாத ஆண் குழந்தை வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...